This Article is From Jan 24, 2019

“இத்தாலிக்கு திரும்பி செல்”- ராகுலுக்கு எதிராக கொதித்த விவசாயிகள்!

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தர பிரதேச அமேதி தொகுதியில், விவசாயிகள் அவருக்கு எதிராக கோஷமிட்டுப் போராடியுள்ளனர்

“இத்தாலிக்கு திரும்பி செல்”- ராகுலுக்கு எதிராக கொதித்த விவசாயிகள்!

இதே பிரச்னையை முன்னதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கிளப்பி, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்

Amethi:

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தர பிரதேச அமேதி தொகுதியில், விவசாயிகள் அவருக்கு எதிராக கோஷமிட்டுப் போராடியுள்ளனர். 

அமேதி மாவட்டத்தில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில் அம்மாவட்டத்தின் கௌரிகன்ஜ் என்ற ஊரில் விவசாயிகள் ராகுலுக்கு எதிராக இன்று போராட்டத்தில் குதித்தனர். அவர்கள், “ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்காக எங்களிடத்திலிருந்து நிலங்கள் வாங்கப்பட்டன. ஒன்று எங்களுக்கு அவர்கள் வேலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் நிலங்களையாவது கொடுத்துவிட வேண்டும்” என்று கோரினர். 

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயியான சஞ்சய் சிங், “எங்களுக்கு ராகுல் காந்தி மீது அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் இந்த நாட்டில் இருக்க லாயக்கில்லாதவர். அவர் இத்தாலிக்கே மீண்டும் சென்றுவிட வேண்டும். எங்கள் நிலத்தைப் புடுங்கியவர் ராகுல் காந்தி” என்று அடுக்கடுக்காக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் குற்றம் சாட்டினார். 

சாம்ராட் சைக்கிள் நிறுவனத்துக்கு அருகில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிறுவனம் ராஜிவ் காந்தி, அமேதி தொகுதியின் எம்.பி-யாக இருந்தபோது, அவரால் திறந்துவைக்கப்பட்டது. 

இதே பிரச்னையை முன்னதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கிளப்பி, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ‘விவசாய நிலங்களை ராகுல் அபகரிப்பு செய்துள்ளார்' என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காங்கிரஸ் தரப்பு மறுத்துள்ளது. 

.