ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் : 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!

சோபியான் பகுதியில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

சோபியான் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


SRINAGAR: 

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தை நோக்கி சுடத் தொடங்கினர். 

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'தீவிரவாதிகள் 3  பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் சண்டை முடியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன'  என்று தெரிவித்தனர். 

என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது, ராணுவத்தை நோக்கி சிலர் கற்களை நோக்கி வீசத்தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளால் சுடத் தொடங்கியபோது கற்களை வீசியவர்கள் கலைந்து சென்றனர். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................