This Article is From Apr 03, 2020

'எனக்கு கொரோனா இல்லை' - இரண்டாம் முறை சோதனை செய்துகொண்ட டிரம்ப்

இம்முறை ஒரு சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டு 15 நிமிடங்களுக்குள் முடிவு தெரியவந்தது

'எனக்கு கொரோனா இல்லை' - இரண்டாம் முறை சோதனை செய்துகொண்ட டிரம்ப்

முதல் சோதனை, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது

ஹைலைட்ஸ்

  • முதல் சோதனை, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது
  • இது கொரோனா பரவலுக்கு பின் டிரம்ப் செய்துகொள்ளும் இரண்டாவது சோதனை
  • டிரம்ப் தனது முதல் சோதனையை, தனது புளோரிடா ரிசார்ட்டுக்கு
Washington, United States:

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெள்ளை மாளிகையில் தனது இரண்டாவது கொரோனா வைரஸ் பரிசோதனையை தான் மேற்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை என்று அறிவித்தார், மேலும் அந்த பரிசோதனையில் மீண்டும் கொரோனாவிற்கு எதிர்மறையாகவே முடிவு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். "நான் இன்று காலை தான் அந்த பரிசோதனையை செய்துகொண்டேன்", என்று அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார். "மேலும் அந்த சோதனையின் முடிவில் தனக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது கொரோனா பரவலுக்கு பின் டிரம்ப் செய்துகொள்ளும் இரண்டாவது சோதனையாகும். இம்முறை அவர் விரைவாக சோதனை செய்யக்கூடிய ஒரு ஆய்வு முறையை எடுத்துக்கொண்டார். இம்முறை ஒரு சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டு 15 நிமிடங்களுக்குள் முடிவு தெரியவந்தது. "இது எவ்வளவு விரைவாக வேலை செய்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் தான் நான் இதை மேற்கொண்டேன் என்றும், இது மிகவும் எளிதானது. நான் இரண்டு பரிசோதனை முறையையும் மேற்கொண்டுள்ளேன், ஆனால் இந்த இரண்டாவது முறை மிகவும் எளிதானது" என்று டிரம்ப் கூறினார்.

முதல் சோதனை, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது, அது மிகவும் நேரமெடுக்கும் முறையைப் பயன்படுத்தியது, முடிவுகள் வர சில மணிநேரங்கள் ஆகின. 73 வயதான டிரம்ப் இதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதை எதிர்த்தார், அதே போல் கொரோனா வைரஸ் வழக்கமான காய்ச்சலை விட மோசமானது அல்ல என்றும் பொருளாதாரத்தை பெருமளவில் முடக்குவது தேவையற்ற ஒன்று என்றும் ஆரம்பத்தில் அவர் வாதிட்டார். அதன் பிறகு, டிரம்ப் தன்னை ஒரு "போர்க்கால ஜனாதிபதி" என்று அறிவித்து, சோதனை திறன்களை பெருமளவில் அதிகரிப்பதை மேற்பார்வையிடுகிறார்.

டிரம்ப் தனது முதல் சோதனையை, தனது புளோரிடா ரிசார்ட்டுக்கு வருகை தந்த பிரேசில் ஜனாதிபதியின் தூதுக்குழுவின் பல உறுப்பினர்கள் அதன் பிறகு கொரோனா தொற்று இருந்ததை அடுத்து மேற்கொண்டார்.  
 

.