கொரோனா தொற்று... வன விலங்குகள் விற்பனையில் 'பல்டியடித்த' சீனா!

“இந்த தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைத் தீவிரமாக எடுத்து, மற்றொரு தொற்றுநோயைத் தவிர்ப்பதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்த உலகின் முதல் நகரம் ஷென்சென்”

கொரோனா தொற்று... வன விலங்குகள் விற்பனையில் 'பல்டியடித்த' சீனா!

இந்த தடையானது மனித சமூகத்தின் நாகரிக நகர்வாகும்.

SHENZHEN, China:

சர்வதேச அளவில் பல இழப்புகளுக்கு காரணமாக கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் மரணமடைந்திருக்கிறார்கள். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை கறிகள் விற்பனை சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சீனா, அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான ஷென்சென்னில் வனவிலங்கு வர்த்தக கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடத் தடை விதித்துள்ளது.

வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுவதற்கான தடை மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தென்சீன தொழில்நுட்ப மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்லப்பிராணிகளை உட்கொள்வதை வளர்ந்த பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், தைவான், ஹாங்காங் போன்ற பகுதிகளில் கூட செல்லப்பிராணிகள் உண்பதைத் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டு, இந்த தடை உத்தரவினை அரசு புதன் கிழமை வெளியிட்டிருந்தது.

முன்னதாக சீனாவின் சட்டமன்றம் பிப்ரவரி பிற்பகுதியில் காட்டு விலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வுக்குத் தடை விதிப்பதாகக் கூறியிருந்தது.

அரசின் இந்த உத்தரவினை அந்நாட்டின் மாகாணங்கள் மற்றும் நகரங்கள் அமல்படுத்த முயன்று வருகின்றன.  ஆசியாவின் பல பகுதிகளிலும் நாய்களை உணவாக உட்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷென்சென் மையத்தின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான அதிகாரி லியு ஜியான்பிங் கூறுகையில், நுகர்வோருக்குக் கிடைக்கும் கோழி, கால்நடைகள் மற்றும் கடல் உணவுகள் போதுமானவை என்றும், கால்நடை விலங்குகளைக் காட்டிலும், வன விலங்குகளில் அதிக சத்து உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஷென்சென் டெய்லி என்கிற அரசு ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாத இறுதியில் வரையறுக்கப்பட்ட ஷென்சென் விதிகளில், ஆமை மற்றும் தவளைகளை உண்பதற்குத் தடை செய்ய இருப்பதாக குறிப்பிட்டிருந்தன. ஆனால், இவை இரண்டும் தென் சீனத்தின் பொதுவான உணவுகளாகும். இதனால், இந்த புதிய விதிகள் சர்ச்சையை உருவாக்கும் என்பதால் இவற்றை உண்பதற்குத் தடையில்லை என்று பின்னர் அரசு தெளிவுபடுத்தியது.

“இந்த தொற்றுநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைத் தீவிரமாக எடுத்து, மற்றொரு தொற்றுநோயைத் தவிர்ப்பதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்த உலகின் முதல் நகரம் ஷென்சென்” என சர்வதேச மனித சமூகத்தின் வனவிலங்கு துறையின் துணைத் தலைவர் தனது பாராட்டினை தெரிவித்திருக்கிறார்.

இந்த தடையானது மனித சமூகத்தின் நாகரிக நகர்வாகும்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)