This Article is From Jun 29, 2020

பிளாஸ்மா வங்கியை உருவாக்குகிறது டெல்லி அரசு! கொரோனா எதிர்கொள்ள நடவடிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பெறப்பட்டு, பாதிப்பு உள்ளவர்களுக்கு செலுத்தப்படும். மீண்டவர்களின் பிளாஸ்மாவில் கொரோனா எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், அது பாதிப்புள்ளவர்களை மீட்கும் என்பதன் அடிப்படையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பிளாஸ்மா வங்கியை உருவாக்குகிறது டெல்லி அரசு! கொரோனா எதிர்கொள்ள நடவடிக்கை

ஏப்ரலில், 49 வயதுடைய நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் பூரண குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவிலிருந்து மீண்டவர்களிடம் பிளாஸ்மா சேகரிக்கப்படவுள்ளது
  • கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்தது
  • ஓரிரு நாட்களில் பிளாஸ்மா வங்கியை அமைக்கும் பணிகள் தொடங்கி விடும்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களிடம் இருந்து பிளாஸ்மா பெறப்பட்டு அவை இந்த வங்கியில் சேகரிக்கப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குணம் அடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்யுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை விரைவில் தொடங்கும். கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் இந்த வங்கியில் பிளாஸ்மாவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த 2 நாட்களில் இந்த பணிகள் தொடங்கி விடும்.

கொரோனா பாதித்த 29 பேருக்கு நாங்கள் பிளாஸ்மா சிகிச்சையை அளித்தோம். இதன் முடிவுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. எனவே பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை அளித்தால் அது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

தெற்கு டெல்லியின் வசந்த் கஞ்ச்சில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அங்கு சென்று பிளாஸ்மா தானம் செய்யலாம். இதுதொடர்பாக ஹெல்ப் லைன் எண்ணும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பெறப்பட்டு, பாதிப்பு உள்ளவர்களுக்கு செலுத்தப்படும். மீண்டவர்களின் பிளாஸ்மாவில் கொரோனா எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், அது பாதிப்புள்ளவர்களை மீட்கும் என்பதன் அடிப்படையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி உள்ளது. தற்போது அங்கு 83,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 65 பேர் உயிரிழந்தனர்.

ஏப்ரலில், 49 வயதுடைய நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் பூரண குணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் அஷீம் குப்தாவின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

.