This Article is From Jun 18, 2020

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு!

அமைச்சருக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து  கொண்டார்.  இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா அறிகுறிகளுடன் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி அமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகம் காணப்பட்டது
  • நேற்று முன்தினம் மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்
  • அமித் ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர் சத்யேந்திர ஜெயின்
New Delhi:

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சருக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து  கொண்டார்.  இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக அவர் சோதனை செய்தபோது முடிவு நெகடிவாக வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர்,  அவருக்கு கொரோனா பாதித்ததற்கான அறிகுறிகள் அதிகம் இருந்தன.  இதையடுத்து அவர் மீண்டும் பரிசோதனை செய்து  கொண்டார்.

இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சத்யேந்திர ஜெய்ன் டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சத்யேந்திர ஜெய்ன் நேற்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டார். அதில் அவர், கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளேன் என்று கூறியுள்ளார். ஞாயிறன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சத்யேந்திர ஜெய்னும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

.