This Article is From Jun 12, 2019

குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்! 2.50 லட்சம்பேர் வெளியேற்றம்!!

புயலை எதிர்கொள்ளும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதி தீவிர புயலாக வாயு தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்! 2.50 லட்சம்பேர் வெளியேற்றம்!!

மொத்தம் 36 தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

குஜராத்தில் வலுவான வாயு புயல் கரையை கடக்கவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக 2.50 லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதலில் சாதாரண புயலாக இருந்த வாயு, தற்போது அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குஜராத்தின் தெற்கு வெராவல் மறும் துவாரகா இடையே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 24 மாவட்டங்களில் சுமார் 2.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

மொத்தம் 36 தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் தாழ்வான இடங்களில் இருப்பவர்கள் நேற்று முதல் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 

மொத்தம் 700 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக 2 ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. 

அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான புயலாக மாறி போர்பந்தர் மற்றும் டையூ யூனியன் பகுதியில் வாயு கரையை கடக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை தொடர்பாக உள்துறை செயலர் ராஜிவ் கவுபா தேசிய பேரிடர் மீட்பு படையின் கூட்டத்தை நடத்தினார். 

முன்னெச்சரிக்கையாக 15 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் புயல் கரையை கடக்கும் வரையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

.