கரையை கடக்கும் நிசர்கா! மும்பை விமான போக்குவரத்து இரவு 7 மணிவரை நிறுத்தம்!!

மகாராஷ்டிராவைத் தவிர, குஜராத், டாமன் மற்றும் டையு, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய பகுதிகளையும் புயல் கரையை கடக்கும்போது பாதிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கரையை கடக்கும் நிசர்கா! மும்பை விமான போக்குவரத்து இரவு 7 மணிவரை நிறுத்தம்!!

நிசர்கா சூறாவளி: மும்பையில் இரவு 7 மணி வரை விமான நடவடிக்கைகள் இருக்காது.

Mumbai:

நிசர்கா புயல் கரையை கடப்பதால் மும்பை சத்ரபதி சிவாஜி விமான முனையத்தில் அனைத்து விமானங்களும் இரவு  7 மணி தரையிறங்கவும் பயணங்கள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வலுவான புயலாக நிசர்கா உருவாகி, மகாராஷ்டிராவின் அலிபாக் என்கிற இடத்தில் கரையை கடக்கின்றது.

கடைசியாக பெங்களூருவில் இருந்து ஃபெடெக்ஸ் விமானம் தரையிறங்கிய பிறகு விமான நடவடிக்கைகளுக்கான தடை அமலாக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக விமான நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் கூட விமானம் பறக்க தொடங்கும்போதும் தரையிறங்கும் போதும் பலத்த காற்று பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது.

மும்பையையொட்டிய பகுதிகளில் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பூங்கா, கடற்கரை என பொதுவெளிகளில் மக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக, அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கையிலிருப்பதை உறுதி செய்துகொண்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.