முன்னெச்சரிக்கையாக மகாராஷ்டிராவில் 40 ஆயிரம்பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
ஹைலைட்ஸ்
- Cyclone Nisarga is the second storm to strike India in two weeks
- The tropical storm made landfall this afternoon near Alibaug
- Over 40 NDRF teams deployed in Maharashtra, Gujarat
Mumbai/ New Delhi: அதி தீவிர புயலாக கருதப்பட்ட நிசர்கா புயல் மகாராஷ்டிரா கடலோரப் பகுதியான அலிபாகில் கரையை கடந்துள்ளது. பலத்த சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்லவேளையாக வலுவிழந்ததால் மும்பை மாநகரம் தப்பித்துக் கொண்டது.
மும்பையை பொறுத்தளவில் இதுவரைக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் எற்படவிலை. காற்றின் வேகம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் யாரும் நாளை மதியம் வரையில் வீட்டை விட்டுவெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக விமானப் போக்குவரத்து இன்று மாலை 7 மணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பையை தவிர்த்து குஜராத், டையூ டாமன், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய இடங்களும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.
நிசர்கா புயல் அலிபாக அருகே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
முன்னெச்சரிக்கையாக 43 தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கப்பட்டிருநதனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஏற்கனவே 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிசர்கா புயலும் தன் பங்குக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை.