This Article is From Nov 28, 2018

மேகதாதுவில் திட்டத்துக்கு தலையசைக்கும் மத்திய அரசு… கொதிப்பில் தமிழகம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது

மேகதாதுவில் திட்டத்துக்கு தலையசைக்கும் மத்திய அரசு… கொதிப்பில் தமிழகம்!

திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது

Bengaluru/Chennai:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘யாரும் மேகதாது அணை திட்டம் குறித்து பதற்றப்பட வேண்டாம். அந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மாநில அரசுக்கு உட்பட்ட விதிமுறைகளில் தான், திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து நாங்கள் எடுக்கும் நடவடிக்கையை உங்களிடம் சீக்கிரமே தெரியப்படுத்துவோம்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், ‘மத்திய நீர் மேலாண்மை கமிஷன், தமிழகத்தின் நியாயமான காரணங்களுக்கு செவி மடுக்காமல், கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அனுமதி கொடுத்துள்ளது. இந்த முடிவு, காவிரியை நம்பியுள்ள பல லட்சம் தமிழக மக்களையும் விவசாயிகளையும் வெகுவாக பாதிக்கும்.

எனவே, விரிவான திட்ட ஆய்வறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு கொடுத்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்து சித்தாரமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மேகதாது திட்டத்துக்கு 5,912 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. எனவே, முன்பு இருந்த அரசு நிர்வாகிகளிடம் கர்நாடகாவின் தற்போதைய அரசு கலந்தோலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிகிறது.

.