உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றில், கொரோனா பாதிப்பு இல்லாத முஸ்லீம்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என விளம்பரம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் செய்தித்தாள்களில் வெளிவந்த அந்த விளம்பரத்தில், கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்தால் மட்டுமே முஸ்லீம் நோயாளிகள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில், இந்து மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பணக்காரர்களும் துன்பகரமானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் 'பிஎம் கேருக்கு' நிதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்துக்கள் மற்றும் ஜெயின்களை அனுமதிப்பதற்குப் பலனாக நிதியளிக்க வேண்டும் என கூறியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே, இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை இரண்டாவதாக ஒரு விளம்பரத்தில் விளக்கம் அளித்தது. எனினும், இது வேண்டுமென்றே மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட தீங்கிழைக்கும் செயல் என அந்த மருத்துவமனையில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதசேம் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமாகும். இதில், 20 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் முஸ்லீம்கள் ஆவார்கள். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். இதுவரை அங்கு 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 150 ஹாட்ஸ்பாட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், அந்த விளம்பரம் வெளியிட்ட மருத்துவமனை அமைந்துள்ள மீருட் பகுதியில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டும் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,000ஐ தாண்டியுள்ளது. மேலும், 519 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.