This Article is From Mar 14, 2020

''கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கலாம்..!'' - சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு

பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.

''கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கலாம்..!'' - சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு

நம்முடைய செயல்பாடு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக அமைவதோடு, பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார் மோடி.

ஹைலைட்ஸ்

  • தெற்காசிய நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன
  • ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வோம் என்கிறார் மோடி
  • உலகிற்கு முன்மாதிரியாக இருப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
New Delhi:

சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாகத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

சார்க் நாடுகள் தங்களது குடிமக்களின் உடல்நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தலாம். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வருகிறது. பல்வேறு அமைப்புகள், அரசுகள் சேர்ந்து முயன்றால், கொரோனாவுக்கு எதிராக நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும். 

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று சார்க் நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாம் வீடியோ கான்பரன்சிங் வழியே ஆலோசனை நடத்தலாம். இது நம் குடிமக்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். 

நம்முடைய செயல்பாடு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக அமைவதோடு, பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும். 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.

(With inputs from IANS and ANI)

.