This Article is From Mar 13, 2020

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து

ஹைலைட்ஸ்

  • கொரோனா அச்சம்: நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து
  • நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுப்பு
  • இந்தியாவில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
New Delhi:

நாடுமுழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பைத் துண்டிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இன்று பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாமா என்று அவையில் கேள்வி எழுந்த போது, சபாநாயகர் அதற்குத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஒம் பிர்லா அவைக்குள் வந்ததும், இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், பிரலாகத் ஜோசி இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.