This Article is From Jun 26, 2020

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 17,296 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 407 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா!

ஹைலைட்ஸ்

  • குணமடைந்தோரின் விகிதமானது 58.24 ஆக அதிகரித்துள்ளது
  • 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 17,296 பேருக்கு கொரோனா
  • 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 407 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4,90,401 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,85,637 பேர் குணமடைந்துள்ளனர். 15,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 17,296 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 407 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விகிதமானது 58.24 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 4,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 192 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,47,741 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையை பொறுத்த அளவில், 1,365 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மும்பை நகரத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 70,990 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதமானது 4.96 சதவிகிதமாக உள்ளது. அதே போல குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 50 சதவிகிதமாக உள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக இரண்டாவதாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,509 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் ஏறத்தாழ 2,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியான தொற்று அதிகரிப்பு காரணமாக சென்னை, மதுரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.