This Article is From May 04, 2020

'தொடர்ந்து 2-வது நாளாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' - கொரோனாவை வெல்லும் கேரளா

சொந்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சுமார் 80 மலையாளிகள் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்தார். 

'தொடர்ந்து 2-வது நாளாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' - கொரோனாவை வெல்லும் கேரளா

சுமார் 1 லட்சம் மலையாளிகள் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா மீண்டு வருவதாக முதல்வர் பினராயி தகவல்
  • கடந்த 2 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை
  • வெளிநாடுகளில் இருந்து சுமார் 1 லட்சம்பேர் கேரளா திரும்ப உள்ளனர்
Thiruvananthapuram:

தொடர்ந்து 2-வது நாளாக மாநிலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் அங்கு 61 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் தற்போது வரை மொத்தம் 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் மலப்புரத்தை சேர்ந்த 4 மாத பச்சிளம் குழந்தை ஒருவர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதன் விளைவாக பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இருப்பினும் 21,724 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 372 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகத்தின் அடிப்படையில் 33 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இவற்றில் 32,315 மாதிகள் நெகடிவாக ரிசல்ட் கிடைத்துள்ளன.

சொந்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், பல்வேறு வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சுமார் 80 மலையாளிகள் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்தார். 

சுமார் 1 லட்சம் மலையாளிகள் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 

கடந்த 2 நாட்களில் மட்டும் கேரளாவில் இருந்து சுமார் 13,818 வெளி மாநில தொழலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.