சலூன், அழகு நிலையங்களுக்கு செல்ல ஆதார் கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டதால் தொழில் கடுமையாக பாதித்தது. இருப்பினும் கடந்த மே 24-ம் தேதி முதல், சென்னையை தவிர்த்து  தமிழகத்தின் மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. 

சலூன், அழகு நிலையங்களுக்கு செல்ல ஆதார் கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி

திங்கள் முதல் சென்னையில் அதிக கட்டுப்பாடுகளுடன் சலூன்  கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதித்தோரை தடம் அறிவதற்கு ஆதார் உதவும்
  • வாடிக்கையாளர்கள் விவரங்களை சேகரித்து வைக்குமாறு அரசு உத்தரவு
  • நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது.
Chennai:

தமிழகத்தில் சலூன் கடைகளுக்கு செல்வோர் ஆதார் அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு  அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தடம் அறிவதற்கு பயன்படும் என்று அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, போன் எண், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்று சலூன் கடை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து கொரோனா தடுப்பு சிறப்பு  அதிகாரி ஜே. ராதாகிருஷ்ணன், என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், 'ஆதார் அட்டை மற்றும் வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் விவரங்கள், ஒருவேளை யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களை தடம் அறிய பயன்படும்' என்று தெரிவித்துள்ளார். 

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டதால் தொழில் கடுமையாக பாதித்தது. இருப்பினும் கடந்த மே 24-ம் தேதி முதல், சென்னையை தவிர்த்து  தமிழகத்தின் மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. 

திங்கள் முதல் சென்னையில் அதிக கட்டுப்பாடுகளுடன் சலூன்  கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இங்கு கை கழுவும் உபகரணங்கள், சானிட்டைசர்கள்  உள்ளிட்டவை இருக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று 806 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.