This Article is From May 11, 2020

'ரயில் டிக்கெட் செலவை சோனியா காந்தி ஏற்றுள்ளார்' - சர்ச்சையை ஏற்படுத்திய நோட்டீஸ்

வெளி மாநில தொழிலாளர்களின் டிக்கெட்டுகளுக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றும், மீத தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

'ரயில் டிக்கெட் செலவை சோனியா காந்தி ஏற்றுள்ளார்' - சர்ச்சையை ஏற்படுத்திய நோட்டீஸ்

வேலையின்மையால் பசியில் வாடும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • பஞ்சாபின் பதிந்தா ரயில் நிலையத்தில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன
  • ரயில் டிக்கெட் செலவை காங்கிரஸ் ஏற்றதாக நோட்டீசில் கூறப்பட்டுள்ளது
  • சமூக வலைதளங்களில் காங்கிரசின் நோட்டீஸ் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது
New Delhi:

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கான டிக்கெட செலவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார் என அச்சிடப்பட்டநோட்டீஸ்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலம் பதிந்தா ரயில் நிலையத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ அமரிந்தர் ராஜா வாரிங் என்பவரால் இந்த நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் முசாபர்பூருக்கான சிறப்பு ரயில் நேற்று கிளம்பியது. 

பதிந்தா ரயில் நிலையித்தில் ரயில் புறப்படத் தயாராக இருந்தபோது, காங்கிரஸ் எம்எல்ஏ அமரிந்தர் ராஜா வாரிங் அங்கு நோட்டீஸ்களுடன் வந்தார். தொழிலாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'உங்கள் டிக்கெட்டுக்கான முழு தொகையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செலுத்தி விட்டார். காங்கிரஸ் கட்சியும், முதல்வர் அமரிந்தர் சிங், காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் ஜகார் ஆகியோர்தான் உங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்' என்று பேசி அவர் பிரசாரம் செய்தார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், நோட்டீஸ்களையும் வெளிமாநில தொழிலாளர்களிடம் எம்எல்ஏ வாரிங் விநியோகம் செய்தார். 
 

n9r7n08c

.

'துயரமான நேரத்தில் உங்களுடன் இருக்கும் காங்கிரஸ்' என்று அந்த நோட்டீசில் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை வழங்கி விட்டு நேரம் கிடைக்கும்போது இதனை படித்துப் பாருங்கள் என்று எம்எல்ஏ வாரிங் கூறுகிறார். 

சில தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு செல்லும் வெளி மாநில தொழிலாளர்களிடம், ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளிமாநில தொழிலாளர்களின் பயணத்துக்கான டிக்கெட் செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று கூறியிருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில், வெளி மாநில தொழிலாளர்களின் டிக்கெட்டுகளுக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றும், மீத தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த கட்டண பங்கீட்டின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏ, தங்களது கட்சிதான் மொத்த செலவை ஏற்கிறது என்று கூறி, நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

வேலையின்மையால் பசியில் வாடும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். 

.