This Article is From Apr 05, 2020

கொரோனா தொற்று குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

முன்னாள் குடியரசு தலைவர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவகவுடா ஆகியோருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நாட்டில் கொரோனா பரவல் குறித்துக் கலந்துரையாடினார்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு முடக்க நடவடிக்கையை அறிவித்திருந்தார் மோடி

New Delhi:

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்பட்டது. இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட 12 வது நாளான இன்று பிரதமர் நாட்டின் முக்கிய தலைவர்களிடையே உரையாற்றினார்.

முன்னாள் குடியரசு தலைவர்களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவகவுடா ஆகியோருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நாட்டில் கொரோனா பரவல் குறித்துக் கலந்துரையாடினார் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங், தமிழக எதிர்க் கட்சி தலைவரான மு.க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாடல் போன்றோர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

முன்னதாக பிரதமர் மூன்று வார காலகட்டத்திற்கு முழு முடக்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பு எதிர் கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் சரியான முறையில் செய்யவில்லை என்றும் எதிர்க் கட்சிகள் பிரதமரை விமர்சித்திருந்தன.

இதேபோல கடந்த வாரம் பிரதமர் பல்வேறு  மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இந்த நடவடிக்கைகள் முழு முடக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறுவதற்கான கலந்தாலோசனைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.  சமீபத்தில் பிரதமர் விளையாட்டு வீரர்களிடமும், கலை துறையைச் சார்ந்தவர்களிடமும் இதேபோல  கலந்துரையாடியிருந்தார். இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டிருக்கின்றனர். தற்போது தேசிய அளவில் பாதிப்பு எண்ணிக்கை 3374 ஆக  இருக்கின்றது. 77 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள இருளினை விரட்ட, பிரதமர் இன்று இரவு அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, அல்லது டார்ச் லைட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.