This Article is From Apr 18, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ தாண்டியது; 480 பேர் உயிரிழப்பு!

Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ தாண்டியது; 480 பேர் உயிரிழப்பு!

Coronavirus Cases: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • 991 new COVID-19 cases were reported in the last 24 hours across India
  • In Mumbai's Dharavi, the number of coronavirus cases has crossed 100-mark
  • Indian scientists are testing a multi-purpose vaccine against COVID-19
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 14,378 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 43 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 480 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு 3 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது, 6.2 நாட்களாக குறைந்துள்ளது என அரசு நேற்று தகவல் தெரிவித்துள்ளது. SARI (கடுமையான சுவாச நோய்) மற்றும் ILI (இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைகளை அதிகரித்ததன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1.5 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில், மே.3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

மும்பையில் உள்ள இந்தியக் கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது  சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.அங்கு உள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் மாலுமிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பின்  முதல் தொகுப்பு ஆகும். தற்போது மாலுமிகளுடன் தொடர்பிலிருந்த நபர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சேரிப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் மட்டும் புதிதாக 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 2,073 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் தற்போது வரை முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. 

இதனிடையே, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாதிப்பிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 13.06 சதவீதமாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, 13.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வியாழக்கிழமையன்று 12.02 சதவீதமாக இருந்தது. புதன்கிழமையன்று 11.41 சதவீதமாக இருந்தது. செவ்வாயன்று, 9.99 சதவீதமாக இருந்தது. நேற்றைய தினம் மட்டும் 260 பேர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கேரளாவின் கண்ணூர் பகுதியில் துபாயிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதத்திற்குப் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதே தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4 சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமையன்று, உத்தரப் பிரதேசத்தில் ஒரு மருத்துவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும், அதன் பின்னர் அது குறைவாகும் என உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

.