This Article is From Jun 13, 2020

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடலை வேறு ஒரு குடும்பம் அடக்கம் செய்த அவலம்!

இதே போல மூன்று நாட்களுக்கு முன்பு, 48 வயதான ஒரு மனிதனின் இறுதி சடங்குகளைச் செய்தபோது, ​​அது அவரது கணவரின் உடல் அல்ல என்பதை அவரது மனைவி கண்டுபிடித்தார்.

அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நபரின் உடலை வேறு ஒரு குடும்பம் அடக்கம் செய்த அவலம்!

அந்த நபர் புதன்கிழமை இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு காந்தி மருத்துவமனை தெரிவித்தது.

Hyderabad:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மூன்று லட்சத்தினை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் வேறு ஒரு குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முதல் சம்பவம் அல்ல.

உயிரிழந்த நபர் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மூச்சுத் திணறலுடன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வென்டிலேட்டரில் வைக்க மருத்துவமனை ஒரு நாளைக்கு ரூ .50,000 முதல் ரூ .1 லட்சம் வரை கேட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை எங்களால் கொடுக்க இயலாது எனக்கூறி காந்தி அரசு மருத்துவமனைக்கு அந்த நபரை மாற்றினர். அந்த நபரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்திருந்தனர்.

“என் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. பின்னர் ஏன் அவனை கொரோனா வார்டில் அனுமதித்தனர் என புரியவில்லை“ என சம்பந்தப்பட்ட நபரின் தந்தை கேள்வியெழுப்பியிருந்தார்.

புதன்கிழமை, அந்த நபர் இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு காந்தி மருத்துவமனை தெரிவித்தது. ஆனால், அவரது உடலை அடையாளம் காணமுடியவில்லை.

“மருத்துவமனை நிர்வாகம் எனக்கு 13 உடல்களை காட்டியது ஆனால், அதில் என் சகோதரர் உடல் இல்லை“ என உயிரிழந்த நபரின் சகோதரர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தினர் உயிரிழந்த நபரின் உடலை கண்டறிய தங்களுக்கு உதவுமாறு சமூக ஊடகங்களில் வேண்டுகோள் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். “இறந்தவருக்கு நாங்கள் சடங்குகள் மூலம் பிரியாவிடை கொடுக்க முயல்கின்றோம்.“ என்கிற வேண்டுகோளை வீடியோக்க வாயிலாக தெரிவித்திருந்தனர்.

"விசாரணையின் போது, ​​ஜூன் 10 ஆம் தேதி அவரது உடல் ஏற்கனவே மற்றொரு குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக உயிரிழந்தவர் வேறு ஒருவரின் உடல் என நினைத்து அந்த குடும்பத்தினர் மேல்குறிப்பிட முதல் நபரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.“ என உயிரிழந்தவரின் சகோதரர் கூறியுள்ளார்.

இதே போல மூன்று நாட்களுக்கு முன்பு, 48 வயதான ஒரு மனிதனின் இறுதி சடங்குகளைச் செய்தபோது, ​​அது அவரது கணவரின் உடல் அல்ல என்பதை அவரது மனைவி கண்டுபிடித்தார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் காரணமாக குடும்பத்தினருக்கு இறந்தவர்களின் உடல்கள் கிடைப்பதில்லை என்றும். மேலும், அவர்களுக்கு தெரியாமலேயே உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றது என்றும் பல்வேறு புகார்கள் பரவலாக மேலெழுந்துள்ளது.

தெலுங்கானாவில் 4,320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

.