This Article is From Jun 25, 2020

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் எடப்பாடி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் எடப்பாடி

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் எடப்பாடி

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை
  • கோவையில் நாள்தோறும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை
  • கோவையில் கொரோனாவை கண்டறிய 10 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கோவையில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், நோய்தொற்று பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், தமிழக அரசின் நடவடிக்கையால் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார். 

கோவையில் நாள்தோறும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமாக இங்கு 36,905 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய கோவையில் 10 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார். 

தொடர்ந்து, பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு, மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று தந்துள்ளது. அனைத்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும்  வியாபாரிகளிடம் காவல்துறையினர் கனிவுடன் நடந்து அன்பை பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.