This Article is From Jul 16, 2020

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!

இதுதொடர்பாக மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்மா தானம் முறைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு! (Representational)

Bengaluru:

கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மாவை தானமாக அளிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிகையிலான கொரோனா பாதிப்பு பதவிவான நிலையில், இதுபோன்ற ஊக்கத்தொகை உயிரை காப்பாற்ற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவை குணப்படுத்த இதுவரை தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், கொரோனாவுக்கான சிகிச்சையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வழிகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வருகிறது. கொரோனா பாதித்து அதிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம். 

இதுதொடர்பாக மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்மா தானம் முறைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

சராசரியாக பிளாஸ்மா தானம் செய்யும் ஒருவரிடம் இருந்து 400-500 மி.லி., பிளாஸ்மா சேகரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தீவிரமான நோயாளிக்கும் இரண்டு மணி நேரத்திற்குள் 200 மி.லி., வழங்கப்படுகிறது.

கர்நாடகாவில் சுமார் 18,000 பேர் குணமடைந்துள்ளதால், அவர்களின் பிளாஸ்மாவை தானம் செய்யக்கூடியவர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளோம். கர்நாடகாவில் சிபிடி மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்திய இரண்டாவது மாநிலமாக நாங்கள் இருந்தோம். 80க்கு மேல் பிளாஸ்மாவைப் பெற்ற மக்கள் முழுமையாக குணப்படுத்தப்பட்டுள்ளனர்; வென்டிலேட்டரில் இருந்தவர்கள் கூட முன்னேற்றமடைந்துள்ளனர் "என்று அவர் கூறினார்.

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,176 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், பெங்களூரில் மட்டும் 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

.