This Article is From Apr 21, 2020

'2 நாட்களுக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்டால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்' : ஐ.சி.எம்.ஆர்.

விரைவாக பரிசோதிக்க உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும்போது, முடிவுகள் தவறாக வருவதாக சில மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன.

'2 நாட்களுக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்டால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்' : ஐ.சி.எம்.ஆர்.

5.4 சதவீத அளவுக்கு மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளின் முடிவுகள் துல்லியாக உள்ளதென ராஜஸ்தான் மாநிலம் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மீது புகார்
  • தரமற்றவையாக உள்ளதென ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றச்சாட்டு
  • 2 நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தல்
New Delhi:

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளால், 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

விரைவாக பரிசோதிக்க உதவும் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும்போது, முடிவுகள் தவறாக வருவதாக ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் புகார் தெரிவித்துள்ளன.

5.4 சதவீத அளவுக்கு மட்டுமே ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளின் முடிவுகள் துல்லியாக உள்ளதென ராஜஸ்தான் அரசு புகார் கூறியுள்ளது.

ஏற்கனவே பல ஆயிரம்பேருக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த நிலையில் சுமார் 6 சதவீதம் மட்டுமே அவை நம்பகத்தன்மை வாய்ந்தவை என சில மாநிலங்கள் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கமாக கொரோனா பாதிப்பை பி.சி.ஆர். கருவி மூலமாக மருத்துவர்கள் கண்டறிந்து வருகின்றனர். இதில் முடிவுகள் தெரிய சில நாட்கள் ஆகுவதுடன், பரிசோதனைக்கான செலவுகளும் அதிகமாக இருந்தன.

இதனை தவிர்ப்பதற்காக சீனாவிடம் இருந்து 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் கிட்டுகளை வரவழைத்து தமிழக அரசு பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் இந்த கிட்டுகளுக்கு நம்பகத்தன்மை குறைவாக உள்ளதென புகார் எழுந்திருக்கிறது. 

.