This Article is From Jun 14, 2020

கொரோனாவை சமாளிக்க 500 சிறப்பு ரயில் பெட்டிகளை டெல்லிக்கு வழங்கும் மத்திய அரசு!

டெல்லி கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மத்திய அரசு 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொடுக்கின்றது. இதன் மூலமாக டெல்லியில் 8,000 புதிய படுக்கைகள் உருவாகும் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை சமாளிக்க 500 சிறப்பு ரயில் பெட்டிகளை டெல்லிக்கு வழங்கும் மத்திய அரசு!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்குப் பிறகு அமித் ஷா இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

New Delhi:

தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 ஆயிரத்தினை கடந்துள்ள நிலையில், இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்ன் ஆகியோர் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்த கலந்தாலோசனையை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், டெல்லிக்கு கொரோனா படுக்கைகள் கொண்ட 500 சிறப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லி கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மத்திய அரசு 500 சிறப்பு ரயில் பெட்டிகளை கொடுக்கின்றது. இதன் மூலமாக டெல்லியில் 8,000 புதிய படுக்கைகள் உருவாகும் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லில் கொரோனா பரிசோதனை அடுத்த இரண்டு நாட்களில் அதிகமாக்கப்படும் என்றும், ஆறு நாட்களுக்கு பின்னர் இந்த பரிசோதனை எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

டெல்லியின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொடர்பு வரைபடத்தை மேம்படுத்த, வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது டெல்லியில் 219 கட்டுப்பாட்டு மண்டலங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அரசின் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிமீட்டர்கள் போன்றவற்றினை வழங்கும் என உறுதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசுடன் இணைந்து போராட டெல்லி தயாராக உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

.