கைக்குழந்தையுடன் கொரோனா தடுப்பு பணியில் ஐஏஎஸ் அதிகாரி! குவியும் பாராட்டு
ஹைலைட்ஸ்
- கைக்குழந்தையுடன் கொரோனா தடுப்பு பணியில் ஐஏஎஸ் அதிகாரி!
- பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- புகைப்படம் பலரது பாராட்டுகளுடன் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Visakhapatnam: ஆந்திராவில், கொரோனா தடுப்பு பணிக்காக பிறந்து ஒரு மாதமே ஆன கைக் குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013ல் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்ற இவர் தற்போது கைக்குழந்தையுடன் அவ்வகலத்தில் அமர்ந்துள்ள புகைப்படம் பலரது பாராட்டுகளுடன் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஸ்ரீஜனா கூறும்போது, இது எனது கடமைக்கான அழைப்பு போன்றது. ஒரு மனிதனாக, நிர்வாகத்திற்கு ஏதேனும் வழியில் உதவியாக இருப்பது என்பது எனது கடமையாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை நான் உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசு விதிமுறைப்படி, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது.
இந்த விஷயத்தை அறிந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், அந்த பெண் அதிகாரியை பாராட்டியதுடன், கடமைக்கான அழைப்பில் பங்கேற்றதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கொரோனாவுக்கு எதிரான வீரர்களைக் கொண்டிருப்பது நாட்டிற்கு அதிர்ஷ்டமானது. கடமைக்கான அர்ப்பணிப்பாக வாழும் உதாரணத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படத்துடன் ட்விட் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 308ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில், 427 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
(With inputs from ANI)
World
67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.
India
4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.
State & District Details