This Article is From Jun 08, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.56 லட்சத்தை தாண்டியது: 7,135 பேர் உயிரிழப்பு!

தொடர்ந்து, 6வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தினமும் 9,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.56 லட்சத்தை தாண்டியது: 7,135 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.56 லட்சத்தை தாண்டியது: 7,135 பேர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.56 லட்சத்தை தாண்டியது
  • கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு
  • அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 7,135 ஆக அதிகரிப்பு
New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.56 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 2 மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து, 6வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தினமும் 9,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 

அதேபோல், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 7,135 ஆக அதிகரித்துள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,56,611 ஆக உள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,24,095 ஆக உள்ளது. இந்த கொடிய வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 206 பேர் உயரிழந்துள்ளனர். 

இந்தியாவில் நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி குணமடைபவர்களின் எண்ணிக்கை தற்போது 48.35 சதவீதமாகவும், வளர்ச்சி விகிதம் 3.89 சதவீதமாகவும் உள்ளது. 

நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 85,000க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்குள்ளாகியுள்ள நிலையில், சீனாவின் எண்ணிக்கையை இந்த மாநிலம் மிஞ்சியுள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் அம்மாநிலத்தில் தான் 3,060 ஆக பதிவாகியுள்ளது. அதன் தலைநகர் மும்பை நாட்டில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றாகும்.

அதனைத்தொடர்ந்து, அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் டெல்லி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 

நேற்று காலை முதல் பதிவான 206 உயிரழப்புகளில் 91 மகாராஷ்டிராவிலும், 30 குஜராத்திலும், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் தலா 18, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 13, ராஜஸ்தானில் ஒன்பது, ஹரியானாவில் நான்கு, ஆந்திராவில் இரண்டு, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட், மற்றும் ஒடிசா மற்றும் பஞ்சாபில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், "அன்லாக் 1" இன் கீழ் இன்று வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது - கட்டுப்பாட்டு மண்டலங்களல் அல்லாத பிற பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்ட திட்டத்தின் முதல் நடைமுறையாகும். 

புதிய கட்டமானது, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சவாலானதாக இருக்கும். மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் கிட்டத்தட்ட 70 சதவீதம், மற்றும் உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 78 சதவீதம் இந்த 5 மாநிலங்களிலே பதிவாகியுள்ளன.

.