This Article is From Jun 02, 2020

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 5,598 பேர் உயிரிழப்பு!

தொடர்ந்து, 5வது நாளாக 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 5,598 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 5,598 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 1.98 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து, 5வது நாளாக 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்து வருகிறது. அதேபோல் தொடர்ந்து, 3வது நாளாக 8,000க்கும் அதிகமானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 204 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது, 5,598 ஆக அதிகரித்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 95,527ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 7வது இடத்தில் உள்ளது. 

தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ கடந்துள்ளதை அடுத்து, நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள 3வது மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 5வது முறையாக ஜூன்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 12.5 லட்சம் பேர் கொரோனா காரணமாக சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 1.05 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பிரேசில் மற்றும் ரஷ்ய நாடுகள் இரண்டாவது, மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 

வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தின் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை தாக்கி, துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மருத்துவ ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை தொழிலாளர்கள் ஆகியோரின் முயற்சிகள் "இந்தியாவின் துணிச்சலான போராட்டத்தின் மூலமாக" இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும்,  "நான் இதை தெளிவாகக் கூற விரும்புகிறேன் - முன்னணியில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மோசமான நடத்தை உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் எல்லைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அடிப்படை சேவைகள் மற்றும் பயணத்துக்கான அரசு அனுமதியளித்த ஆவணங்கள் இருப்பவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

மத்திய அரசு, நாடு முழுமைக்கும் கொரோனா பரவலைத் தடுக்க போட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று முதல் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹரியானா அரசு, டெல்லி - குர்கான் எல்லையைத் திறந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் கெஜ்ரிவாலின் அதிரடி அறிவிப்பு வெளியானது. 

.