This Article is From Jan 31, 2019

ராஜஸ்தான் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

அரியானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.

ராஜஸ்தான் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநில இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தான் ராம்கர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
  • அரியானாவில் பாஜக முன்னிலை வகிக்கிறது
  • ராம்கர் தொகுதி வெற்றியால் ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் 100-ஆக உயர்வு
New Delhi:

ராஜஸ்தானில் ராம்கர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 200 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலம் 100-ஆக உயர்ந்துள்ளது. 

அரியானா மாநிலம் ஜிந்த் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. ராஜஸ்தானின் ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட சாபியா ஜுபைர் மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அரியானா ஜிந்த் சட்டசபை தொகுதியில் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் பாஜக வேட்பாளர் கிருஷ்ணன் மித்தா உள்ளார். ராம்கர் தொகுதியில் 20-க்கும் அதிகமானோர் போட்டியிட்டனர். 

ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் 7-ம்தேதி பகுஜன் சமாஜ வேட்பாளர் லக்ஷ்மன் சிங் காலமானார். இதையடுத்து அங்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

.