This Article is From Nov 13, 2019

Maharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..?

President's Rule in Maharashtra - தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

Maharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..?

President's Rule in Maharashtra - மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது

New Delhi:

மகாராஷ்டிரத்தின் (Maharashtra) ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல் செய்ய பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது, மாநிலத்தின் எதிர்க்கட்சிகளின் ஒன்றாக காங்கிரஸ். 

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மாநிலத்தில் அதிக இடங்களைப் பிடித்த பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும், அதற்குள் மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து, அது அமலுக்கு வந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, நேற்றைய தினம் சிவசேனாவுக்கு ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அக்கட்சியால் ஆட்சி அமைப்பதற்கு தங்களுக்கு போதிய பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்க முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பலம் இருப்பதை நிரூபிக்க தங்களுக்கு மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஒருநாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மேலும் சரத்பவாருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, சரத்பவாருடன் தொலைபேசியில் உரையாற்றி சோனியா காந்தி, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவசேனாவும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரந்தீப் சுர்ஜேவாலா, மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து, ‘பாஜக-வுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர், அதற்கு 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்தார். சிவசேனாவுக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்தார். தேசியவாத காங்கிரஸுக்கு 24 மணி நேரம் கூட கொடுக்கவில்லை. காங்கிரஸுக்கு அழைப்பே விடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தது நியாயமற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். ஜனநாயகப் படுகொலை. அரசியல் சட்ட சாசன விதிமுறையை கேலிக்கு உள்ளாக்கும் செயல்,' என்று கடுமையாக சாடியுள்ளார். 

.