வருமான வரித்துறையினர் இலக்கு என் மீது மட்டுமே உள்ளது - திரு.குமாரசாமி
ஹைலைட்ஸ்
- புகாரில் "தகுந்த நடவடிக்க" எடுக்ககோரியுள்ளது
- வருமான வரிச்சோதனை அரசு ஒப்பந்ததாரர்களின் வீட்டில் நடைபெற்றது
- வருமானவரித்துறை என்னை குறி வைத்துள்ளது -எச்.டி.குமராசாமி
Bengaluru: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் புகாரை வருமான வரி இயக்குநர் பி.ஆர் பாலகிருஷ்ணன், மாநில இயக்குநர் மற்றும் ஜெனரல் இன்ஸ்பெக்டர் நீலமணி ஆகியோருக்கு அனுப்பி ‘தகுந்த நடவடிக்கை' என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.
மார்ச் 30 தேதியிடப்பட்ட நான்கு பக்க புகாரில்,“வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையகம் ஒப்பந்ததாரர்கள் மற்றும் வரி ஏய்ப்பு குற்றவாளிகளுக்கு எதிராக சோதனை நடத்தவுள்ள நிலையில்ல், முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி மற்றும் பிற அமைச்சர்கள் ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வருவாய் வரித்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 27 அன்று வெளியான அறிக்கையில் பாலகிருஷ்ணன், “ வரி ஏய்ப்பவர்களுக்கு ஆதரவாக எச்சரித்து தன் பதவி பிரகட ஆணையை மீறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
மைசூரு, மாண்டியா மற்றும் ஹாசன் ஆகியவற்றில் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியியலாளர்களின் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2.11 கோடி பணம் மற்றும் நகைகள் கிடைத்தன. திரு. குமராசாமி "அடிக்கடி தன்னுடைய வாகனம் அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் வருமான வரித்துறையினர் இலக்கு என் மீது மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நிகில் கெளடாவின் ஹோட்டல் அறையை சோதனை செய்ய வருமான வரி அதிகாரிகள் முயன்றனர்.
நிகில் கவுடா காங்கிரஸ் -ஜனதாதல் வேட்பாளாராக மாண்டியாவில் நிற்கிறார். கர்நாடாக காங்கிரஸ் நிதிக் குழு தினேஷ் குண்டு ராவ், “வருமான வரித்துறையின் மீது நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. ஒரு அரசியல் கட்சியின் வழிமுறைப்படி திரு. பாலகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார்“ என்று குற்றம் சாட்டினார்.