1 லட்சம் கொரோனா பாதிப்பை கடந்தது பெங்களூரூ!

மாநிலம் முழுவதும் இதுவரை 23,14,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 83,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

1 லட்சம் கொரோனா பாதிப்பை கடந்தது பெங்களூரூ!

இன்று 1 லட்சம் கொரோனா பாதிப்பை கடந்தது பெங்களூரூ!

Bengaluru:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ள 7,571 புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 2,948 பேர் பெங்களூரூவை சேர்ந்தவர்களாவார்கள்.

தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,64,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,02,770 பேர் பெங்களூரூவை சேர்ந்தவர்களாவார்கள்.

உயிரிழப்பினை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் இதுவரை 4,522 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1,635 பேர் பெங்களூரூவை சேர்ந்தவர்களாவார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாநில அரசு கட்டுப்பாட்டு மண்டலங்களை மறு வரையறை செய்துள்ளது. மொத்தமுள்ள 37,863 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 16,669 மண்டலங்கள் செயலில் உள்ளன.

மாநிலம் முழுவதும் இதுவரை 23,14,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 83,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 69,652 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 50  ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.