This Article is From Feb 03, 2020

பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பாஜகவை சேர்ந்த சின்மயானந்த்துக்கு ஜாமின்!

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாந்த்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. 

சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் படித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்

New Delhi:

சட்டக்கல்லூரி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயாந்த்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது. 

ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார். 

இதைத்தொடர்ந்து, அதிகாரத்தில் இருந்து தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவர் குற்றத்தை ஒப்புகொண்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, சின்மயானந்த் தரப்பில் அந்த பெண்ணின் மீது வீடியோவை காட்டி ரூ.5 கோடி பணம்பறிக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அந்த பெண் கடந்த டிசம்பர் மாதில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

.