பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜக சின்மயானந்த் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்

Chinmayanand Case: 73 வயதான சின்மயானந்த்க்கு ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் திங்கள் மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் ஷாஜகான்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Chinmayanand Case: கைதுக்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். (File)

New Delhi:

முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  73 வயதான சின்மயானந்த்க்கு ஜாமீன் மனு  மறுக்கப்பட்ட நிலையில் திங்கள் மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  இந்நிலையில் ஷாஜகான்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

உயர் இரத்த அழுத்தம் மற்றும் மார்பு வலி தொடர்பான புகார்களுடன் சின்மயானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பலவீனம் மற்றும் சிறுநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

லக்னோவில் உள்ள எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனையில் இதய  சிகிச்சை பிரிவில் 8 நாட்கள் கழித்த பின்னர் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டார். 

சின்மயான்ந்த் மீது 23 வயது சட்ட கல்லூரி மாணவி கற்பழிப்பு மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை தெரிவித்தார்.  

அந்த பெண்ணின் மீது வீடியோவை காட்டி பணம்பறித்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. தற்போது அந்த பெண் சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவர் குற்றத்தை ஒப்புகொண்டதாக தெரிவித்தனர்.

அப்பெண் கோரிய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது இருதரப்பினரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டியிருக்கும். 

ஹைலைட்ஸ்

  • சின்மயானந்த் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார
  • செப்டம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார்.
  • சின்மயானந்த் கொடுத்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
More News