This Article is From Sep 02, 2020

என்னை என்கவுண்டரில் கொல்லாமல் விட்டதற்கு நன்றி; உ.பி மருத்துவர்!

முன்னதாக உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை மருத்துவர் கபீல் கான் விடுதலை செய்யப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உ.பி மருத்துவர் விடுதலை
  • இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடந்த ஜனவரி 29 அன்று கைது செய்யப்பட்டார்
  • தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதம்: HC
Mathura:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வெறுப்புணர்வையும் கலவரத்தையும் துண்டும் வகையில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மருத்துவர் கபீல் கான் இன்று அதிகாலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இவர் ஆற்றிய உரையானது மத நல்லிணக்கத்திற்கு எதிரானதாகவும், கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்ததாகவும் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடந்த ஜனவரி 29 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் ஆற்றிய உரையில் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளதைப்போன்று ஏதும் இல்லையெனக்கூறி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மதுராவில் உள்ள சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

“நான் குற்றமற்றவன் என்றும் என்னுடைய பேச்சுகள் வன்முறையை தூண்டவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், என்னை கைது செய்து மும்பையிலிருந்து மதுராவிற்கு அழைத்து வரும்போது என்னை (Special Task Force) என்கவுண்டர் செய்யாமல் விட்டதற்கும் நன்றி” என அவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.