கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,045 பேர் உயிரிழப்பு! 78,357 பேர் பாதிப்பு!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,045 பேர் உயிரிழப்பு! 78,357 பேர் பாதிப்பு!!

ஹைலைட்ஸ்

  • உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது
  • நாடு முழுவதும் கொரேனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தை நெருங்கியது
  • கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிப்பு
New Delhi:

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 37,69,524 ஆக பதிவாகியுள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 1,045 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 8,01,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29,019,09 பேர் குணமடைந்துள்ளனர்.என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளை பொறுத்த அளவில் இதுவரை நாடு முழுவதும், 4,43,37,201 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10,12,367 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் 8,08,306 கொரோனா நோயாளிகளைக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலம், கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புகளை கொண்ட மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது. இதுவரை 24,903 பேர் கொரோனா தொற்றால் இம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசமும் தமிழகமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில், அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,312 புதிய கொரோனா நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது. அதே போல 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த பாதிப்பானது1.77 லட்சத்தை டெல்லி பதிவு செய்துள்ளது.

Newsbeep

சர்வதேச நிலைமை:

சர்வதேச அளவில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.57 கோடியை எட்டியுள்ளது. இதுவரை 8.56 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 

60.73 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் அமெரிக்க உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து 39.50 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.