This Article is From Oct 25, 2019

Video: நாய்களுக்கு சாயம் பூசி பாண்டாவாக மாற்றிய கஃபே ஓனர்

ஆறு அபிமான பாண்டா குட்டிகளின் வீடாகத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் சற்று நெருக்கமாகப் பாருங்கள், பாண்டா குட்டிகள் அல்ல சாயம் பூசப்பட்ட நாய்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

Video: நாய்களுக்கு சாயம் பூசி பாண்டாவாக மாற்றிய கஃபே ஓனர்

கஃபேவின் உரிமையாளர் நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி விமர்சனங்களை புறந்தள்ளுகிறார்.

சீனாவில் செல்லப்பிராணி கஃபேவின் உரிமையாளர் தன்னுடைய நாய் குட்டிகளுக்கு சாயம் பூசிய  பாண்டா கரடி போன்று மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பாண்டா' கஃபே செங்டூவில் அமைந்துள்ளது. 

செக்டூ நகரம் பாண்டா கரடி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பெயர் பெற்றது. சமீபத்தில் பொது மக்களுக்காக திறக்கப்பட்டது என்று பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. க்யூட் பெட் கேம்ஸ் என்று பெயரிடப்பட்ட முதல் முறை பார்க்கும் போது ஆறு அபிமான பாண்டா குட்டிகளின் வீடாகத் தோன்றுகிறது. எவ்வாறாயினும் சற்று  நெருக்கமாகப் பாருங்கள், பாண்டா குட்டிகள் அல்ல சாயம் பூசப்பட்ட நாய்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். 

கண்களையும் காதுகளையும் சுற்றி கருப்பு சாயம் பூசப்பட்டுள்ளது. சீனாவின் சமூக ஊடக தளமான வெய்போ போன்றவற்றில் வைரலாகியுள்ளது. இந்த செயல் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. கண்ணைச் சுற்றி சாயம் பூசப்பட்டுள்ளதால் தீங்கு விளைவிக்கும் என்பதால் பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கஃபேவின் உரிமையாளர் நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி விமர்சனங்களை புறந்தள்ளுகிறார்.

நாய்களுக்கு பூசப்பட்ட சாயங்கள் மிகவும் விலையுயர்ந்தது.  ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு ட்யூப் சாயத்தின் விலை 800 யுவான் (ரூ. 8,000) ஆகும். சாயம் 100 சதவீதம் பாதுகாப்பானது 

“அவை உண்மையான பாண்டா கரடிகள் அல்ல என்றாலும், எங்கள் வாடிக்கையாளர்கள் பாண்டா கலாசாரத்தை அனுபவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.