This Article is From Aug 02, 2019

தன்பால் ஈர்ப்புடைய பெண்களை 'அசௌகரியம்' காரணம் காட்டி வெளியேற்றிய கிளப்; வெடிக்கும் சர்ச்சை!

சிறிது நேரம் கழித்து இருவரும் ஹோட்டலிருந்த கழிவறைக்கு சென்றிருந்தோம். சிறிது நேரத்தில் ஹோட்டலில் உள்ள 4 ஆண் பவுன்சர்ஸ் மற்றும் ஒரு பெண் பவுன்சர்ஸ் கதவை தட்டி உள்ளே என்ன செய்கிறீர்கள், உடனே வெளியே வரவும் என்று கூறியதாக” தெரிவித்துள்ளார்.

தன்பால் ஈர்ப்புடைய பெண்களை 'அசௌகரியம்' காரணம் காட்டி வெளியேற்றிய கிளப்; வெடிக்கும் சர்ச்சை!

அந்த நேரத்தில் சண்டையை விரும்பாத பெண்கள் இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.

Chennai:

சென்னையில் ஒரு கிளப்பில் தன் பாலின் ஈர்ப்புடைய இரண்டு பெண்கள் ஊழியர்கள் தங்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் ரசிகா கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவாங்கி சிங் ஆகியோர் ஹோட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை புண்படுத்தியுள்ளதாக  ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

“நானும் எனது தோழியும் சனிக்கிழமை இரவு தி ஸ்லாட் ஹோட்டல் என் ஹோட்டலில் உள்ள பாருக்கு செல்ல முடிவு செய்தோம். அங்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது  4, 5 ஆண்கள் எங்களை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.” என்று ரசிகா பேஸ்புக் பதிவில் பதிவிட்டிருந்தார். 

“தன் பாலின ஈர்ப்புடையவர்களை காணும் போது மட்டும் ஏன் பிறருக்கு ஜீரணிக்க மிகவும் கடினமாக இருந்தது என்பது எனக்கு தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து இருவரும் ஹோட்டலிருந்த கழிவறைக்கு சென்றிருந்தோம். சிறிது நேரத்தில் ஹோட்டலில் உள்ள 4 ஆண் பவுன்சர்ஸ் மற்றும் ஒரு பெண் பவுன்சர்ஸ் கதவை தட்டி உள்ளே என்ன செய்கிறீர்கள், உடனே வெளியே வரவும் என்று கூறியதாக” தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியடைந்த பெண்கள் இருவரும் வெளியே வந்துள்ளனர். உடனடியாக ஹோட்டலை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளனர். அந்த நேரத்தில் சண்டையை விரும்பாத பெண்கள் இருவரும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து கிராஸ்வே ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் சிஇஓ யாங்கியா பிரகாஷ் சந்திரனிடம் பேசியபோது “ பார் மற்றும் ஹோட்டலில் சில நேரங்களில் சில வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லையென்றால் அந்த சூழலை கருத்தில் கொண்டு அந்த நபரகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை செய்வோம்” என்று கூறியுள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.