தண்ணீருக்குள் அமர்ந்து 'ரூபிக்ஸ் கியூப்' விளையாடி சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை!

தண்ணீருக்குள் அமர்ந்து ரூபிக் க்யூப்ஸ் நிறங்களை 2 நிமிடங்கள் 17 நிமிடங்களில் ஒரே நேர்க்கோட்டில் சேர்த்துள்ளார்.

தண்ணீருக்குள் அமர்ந்து 'ரூபிக்ஸ் கியூப்' விளையாடி சென்னை இளைஞர் கின்னஸ் சாதனை!

6 கட்டங்களில் உள்ள ரூபிக் க்யூப்ஸை, அதுவும் தண்ணீருக்குள் அடியில் அமர்ந்து விளையாடி கின்னஸ் சாதனை

சென்னையைச் சேர்ந்த இளையராம் சேகர் என்ற இளைஞர் தண்ணீருக்குள் அடியில் அமர்ந்து ரூபிக்ஸ் கியூப் விளையாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

உலகம் முழுவதும் பலராலும் விரும்பி விளையாடக்கூடிய விளையாட்டு ரூபிக் க்யூப்ஸ் ஆகும். இதில் உள்ள நிறங்களை ஒரே நேர்க்கோட்டில் சேர்க்க வேண்டும். வெகுவிரைவாக இந்த விளையாட்டை ஆடி முடித்து பலர் உலக சாதனைக்கு முயன்று வருகின்றனர். இதுவரையில் 5 கட்டங்கள் உள்ள ரூபிக் க்யூப்ஸில் உலக சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த இளையராம் சேகர் (25) என்ற இளைஞர் 6 கட்டங்களில் உள்ள ரூபிக் க்யூப்ஸை, அதுவும் தண்ணீருக்குள் அடியில் அமர்ந்து விளையாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முறையான பயிற்சியும், தியானப் பயிற்சியும் உதவியதாக கூறுகிறார். 

தண்ணீருக்குள் அமர்ந்து 2 நிமிடங்கள் 17 நிமிடங்களில், ரூபிக் க்யூப்ஸ் நிறங்களை ஒரே நேர்க்கோட்டில் சேர்த்துள்ளார். அவரது சாதனை வீடியோவை இங்குக் காணலாம்:

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஃபேஸ்புக்கில் மட்டும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும், நூற்றுக்கணக்கான கருத்துகளும் பெற்றுள்ளன.

கின்னஸ் உலக சாதனையின்படி, பிராணாயாமம் என்ற தியான முறை பயிற்சிகளை மேற்கொண்டு, தண்ணீருக்குள் அமர்ந்து கின்னஸ் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. 

Newsbeep

Click for more trending news