This Article is From Sep 07, 2019

சந்திரயான் -2 லேண்டர் துண்டிக்கப்பட்டபின் கட்டுப்பாட்டு அறையில் நடந்தது என்ன?

விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர்.

ஹைலைட்ஸ்

  • 3.10 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானி திட்டமிடப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு
  • நான் உங்களுடன் இருக்கிறேன் - பிரதமர் மோடி
  • இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறினார்கள்
Bengaluru:

சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நெருங்கி சுற்றி வந்த விக்ரம் லேண்டர் தரையிரங்கும்போது  தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அமைதி ஏற்பட்டது. இஸ்ரோ தலைவர் சிவன் முதலில் நரேந்திர மோடிக்கு விளக்கமளித்தார். பின்னர் வருத்தத்துடன் அறிவிப்பை வெளியிட்டார். சந்திராயன் 2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பு இழந்தது குறித்து அறிவித்தார். 3.10 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானி திட்டமிடப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்.

நற்செய்திக்காக நாடே காத்திருந்தபோது கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர்.

பின்னர் இஸ்ரோ தலைவர் உட்பட விஞ்ஞானிகள் குழு எழுந்து நின்று பிரதமர் மோடியிடம் நடந்து செல்வதைக் காண முடிந்தது. பிரதமர் தலையசைத்த படி விஞ்ஞானிகள் குழுவை நோக்கி நடந்து சென்று இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் அளிப்பதாகத் தோன்றியது. 

“விக்ரம் லேண்டரின் நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.” என இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியேறும் போது அவர் இஸ்ரோ  முதுகில் தட்டிக் கொண்டு விஞ்ஞானிகளுக்கு ஒரு பேச்சு கொடுத்தார். “நம்பிக்கையை இழக்காதீர்கள். தைரியமாக இருங்கள். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. நீங்கள் அனைவரும் செய்திருப்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. நீங்கள் நாட்டிற்கும் விஞ்ஞானத்திற்கும். மனித குலத்திற்கும் ஒரு பெரிய சேவையைச் செய்துள்ளீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்”என்று தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் மோடி செய்த ட்வீட்டில் “இவை தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய தருணம். நாம் தைரியமாக இருப்போம்”என்று தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.