சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!!

CBSE Results: மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!!

CBSE Results 2019: 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

New Delhi:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.cbseresults.nic.in  என்ற இணைய தளத்தில் பார்த்தக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப் பூர்வ இணைய தளத்தை தவிர்த்து கூகுள் சர்ச்சிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். உயர் நிலைக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்வதற்காக இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

தேர்வு முடிவுகள் தாமதாக வெளியானால், அதன்பின்னர் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது என அடுத்தடுத்த செயல்பாடுகள் இருப்பதால், முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் உயர் கல்விக்கு அதிக மாணவர்களை கொண்டு வர முடியும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.சி.எஸ்.இ. மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா பள்ளி தேர்வுகள் வெளியாகும் முன்பாகவே, சிபிஎஸ்இ. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.