This Article is From Dec 19, 2018

இனி லைசென்ஸையும் இன்ஸ்யூரன்ஸையும் எடுத்துச் செல்ல அவசியமே இல்லை!

ஆவணங்களை இனி கையில் எடுத்துக்கொண்டு செல்லாமல், எம்பரிவாகன் அல்லது டிஜி லாக்கர் போன்ற செயலிகளில் மின்னணு வடிவத்தில் சேமித்து வைத்துகொள்ளலாம்.

இனி லைசென்ஸையும் இன்ஸ்யூரன்ஸையும் எடுத்துச் செல்ல அவசியமே இல்லை!
New Delhi:

டெல்லி: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்கிழமையன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், ஸ்டான்டேர்டு ஆபரேட்டிங் புரோசிஜர் (Standard operating procedure) படி, வாகன ஓட்டிகள் இனி வாகன ஓட்டுநர் உரிமம், மாசுபாடு சான்றிதழ், வாகன காப்பபீடு, போன்ற ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு செல்ல தேவையில்லை, அதற்க்கு பதிலாக எம்பரிவாகன் அல்லது டிஜி லாக்கர் போன்ற செயலிகளில் மின்னணு வடிவத்தில் சேமித்து வைத்துகொள்ள முடியும்.

அதனால் வாகன ஓட்டிகளுக்கு அசல் சான்றிதழ்களை போகுமிடம் எல்லாம் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த செயலிகள் மூலம் வாகன ஓட்டுனரின் எல்லா சான்றிதழ்களின் நிலையை அறிய எளிமையாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

எம்பரிவாகன் செயலி மூலம் ஆஃப் லையினிலேயே எம் பாரிஹானின் க்யூ.ஆர் குறியீடை வைத்து சான்றிதழ்களை சரிபார்க்க முடியும். மேலும் இதன் மூலம் உரிமம் இல்லாத வாகனங்களை போலீசாரால் விரையில் ஆதாரத்துடன் கண்டறிய முடியும் எனக் கருதப்படுகிறது.

மேலும் இச்செயல்பாட்டை மாநில அரசாங்கங்கள் விரைவாக அமல் படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் 1989 மத்திய வாகன சட்டத்தின் கீழ் உள்ள சட்டம் 139 படி எஸ்.ஓ.பி யை உடனடியாக செயல்படுத்த முடியும் என கூறினர்.

.