புயலுக்கு பின் மம்தாவை தொடர்பு கொண்டோம், ஆனால்.. பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், அவர் இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் எதிர்பார்ப்பாளர்களுக்கு உதாரணாமக இருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
புயலுக்கு பின் மம்தாவை தொடர்பு கொண்டோம், ஆனால்.. பிரதமர் அலுவலகம் விளக்கம்!

பிரதமர் மோடியின் அழைப்புகளுக்கு மம்தா திரும்ப அழைக்கவேண்டும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Kolkata: 

ஃபனி புயல்(Cyclone Fani) தாக்கத்திற்கு பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்பது தவறானது என பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டுமுறை மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், அவர் பிரசாரத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார்கள், ஆனால், அவர் அழைப்புக்கு பதில் அழைப்பு விடுக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், அவர் இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் எதிர்பார்ப்பாளர்களுக்கு உதாரணாமக இருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல்(Fani), நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 185 முதல் 200 கிமீ வரை பலத்த சூரைக்காற்று வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஒடிசா அரசு, புயலை சரியாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் மூலம் உயிர்ச் சேதத்தை பெருமளவு குறைத்துள்ளது.

இந்த ஃபனி புயலானது ஒடிசாவை தொடர்ந்து, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து சென்றது. இதனால், 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்களை மம்தா ரத்து செய்து விட்டு, புயல் அதிகம் தாக்கும் கடலோர பகுதியான கார்க்பூரிலிருந்து புயல் தாக்கம் குறித்து கண்கானித்து வந்தார்.

புயல் பாதிப்பு குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் கேட்டறிந்தார். இதேபோல், மேற்குவங்க முதல்வருக்கு அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அம்மாநில ஆளுநரை பிரதமர் தொடர்பு கொண்டதாகவும் ஒரு சில ஊடகங்கள் தெரிவித்தன. இதைபோல், நவீன் பட்நாயக் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு தரப்பிலும் இருந்து விலகி இருந்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, இரண்டு முறை சினிக்கிழமையன்று மம்தாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும், முதலில் அவர் பயணத்தில் இருக்கிறார் பின்னர் அழைக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது முறை அழைத்த போதும், திரும்பி அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர். மேற்குவங்கத்தில் நேற்று விமான சேவைகள் துவங்கிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஃபனி புயல் மேற்குவங்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................