This Article is From Jul 10, 2018

டெல்லியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: 200 பேரிடம் விசாரணை!

டெல்லியின் புராரி பகுதியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர்

டெல்லியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: 200 பேரிடம் விசாரணை!
New Delhi:

டெல்லியின் புராரி பகுதியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்த முதற்கட்ட பிரேத பரிசோதனை, ’11 பேரும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்துள்ளனர்’ என்று தெரிவித்தாலும், இறுதி பிரேத பரிசோதனைக்காக போலீஸ் காத்திருக்கிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 200 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களில் ஒருவரான 33 வயது பிரியங்கா பாட்டியாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் போலீஸ் 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் கூறப்படுகிறது. 

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் இருக்கும் பாட்டியா குடும்பத்தின் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் நில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். முதற்கட்ட பிரேத பரிசோதனை அடுத்து, தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சம்பவத்தை அடுத்து போலீஸ் பாட்டியா குடும்பத்தின் வீட்டில் சென்று பார்த்த போது, 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  

இதையடுத்து, போலீஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் பல டயரிகள் கிடைத்துள்ளன. மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸாருக்குக் கிடைத்த குறிப்புகள் வைத்து யூகிக்க முடிந்தது.

காகிதக் குறிப்பில், ‘மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல டயரிகளிலும், ‘பாத் பூஜா’ குறித்த குறிப்புகள் இருந்துள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. போலீஸ், இந்த விவகாரம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டுது உறுதி செய்யப்பட்டது. 

இறுதிக்கட்ட பிரேத பரிசோதனைக்காக போலீஸ் காத்திருக்கும் நிலையில் தற்போது ஏறக்குறைய 200 பேரிடம் இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தகது.

.