This Article is From Sep 19, 2018

சர்வதேச எல்லையில் இந்திய வீரரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்

ஜம்மு காஷ்மீரின்(jammu and kashmir) ராம்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படைகள் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மிருகத்தனமாக நடந்திருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

Jammu/New Delhi:

சர்வதேச எல்லையில்(International Border) இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ராம்கர் செக்டார் பகுதியில் இந்த மிருகத்தனமான செயல் நேற்று நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கோட்டு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையிடம் இந்தியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் தலைமை காவலராக இருந்த நரேந்திர குமார் என்றும் அவரது உடலில் 3 இடங்களில் தோட்டா துளைத்திருந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச எல்லையில் இதுபோன்ற கொடூரத்தனமான சம்பவம் நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை. இதற்கு மத்திய அரசும், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகமும் உரிய நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் கூறினர்.

.