சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

மது அருந்தி விட்டு, போதைப் பொருட்களை பயன்படுத்திய இளைஞர் சடலத்துடன் உடலுறவு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

குற்றச் செயலில் ஈடுபட்ட காசிம் குராம்

London:

இங்கிலாந்தில் துக்க வீட்டில் சடலங்களுடன் உடலுறவு கொண்ட இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு துக்க வீடு ஒன்றில், போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலங்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். போலீசில் அவர் பிடிபட்டதை தொடர்ந்து, வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

இதனை விசாரித்த நீதிபதி, ‘'மனிதனாக இருப்பவன் இந்த காரியத்தை செய்ய முடியாது. மனித உணர்வுகளை அனைத்தையும் நீ சிதைத்து விட்டாய். சடலங்களுடன் ஏன் உடலுறவு கொண்டாய் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்'' என்று கூறி அவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

முன்னதாக காசிம் குராம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரது தரப்பு வழக்கறிஞர் ஜோசப் கீட்டிங் கூறுகையில், குராம் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவனிடம் மனிதனுக்கான குணங்கள் மறைந்து விட்டன என்றார்.

Listen to the latest songs, only on JioSaavn.com