This Article is From Nov 04, 2018

கோவா: பாரிக்கர் உடல்நிலையைக் கொண்டு அனுதாபம் தேடுகிறது பாஜக – காங்கிரஸ்

கணையம் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தற்போது தனது இல்லத்தில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்

கோவா: பாரிக்கர் உடல்நிலையைக் கொண்டு அனுதாபம் தேடுகிறது பாஜக – காங்கிரஸ்

பாரிக்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

Panaji:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையக் காட்டி மக்கள் மத்தியில் அனுதாப அலையை பாஜக ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் கோவா மாநில செய்தி தொடர்பாளர் ஜிதேந்திர தேஷ் பிரபு கூறுகையில், “ கோவாவில் நடப்பது மிகவும் துரதிருஷ்டவசமாக உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், பாரிக்கரின் உடல்நிலை பாதிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாக்காளர்களை கவர்வதற்காக பாரிக்கர் பயன்படுத்தப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

62 வயதாகும் மனோகர் பாரிக்கர் கணைய பாதிப்பு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

.