தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி: வி.பி.துரைசாமி அதிரடி!!

பாஜக தலைமையிலான கூட்டணி தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி: வி.பி.துரைசாமி அதிரடி!!

தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி: வி.பி.துரைசாமி அதிரடி!!

பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி, பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் என மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது, கனிமொழியை இந்தியரா என கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் கனிமொழி நாம் உள்ளே நுழைந்தால் உள்ளே காவலர்கள் அழைத்து செல்வார்கள், உரிய முறையில் மரியாதை கொடுப்பார்கள் நானும் ராஜசபா எம்.பி யாக இருந்துள்ளேன். 

கனிமொழி கூறியதை போல் நடந்திருப்பற்கான வாய்ப்பில்லை முறையாக விசாரித்தால் உண்மை தெரியும். இவர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ உள்ளே பேசுவதை விட வெளியே தான் அதிகம் பேசுகிறார்கள். வெளிநடப்பு செய்வதை மட்டுமே முதல் காரியமாக செய்து வருகின்றனர். 

நான் பாஜகவில் இருப்பதால் இவ்வாறு சொல்லவில்லை நிச்சயமாக வேறு யாருக்காவது நடந்துள்ளதா என்று பாருங்கள் கனிமொழி பேசியதை போல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றார். மேலும், கனிமொழிக்கு இந்தி தெரியும் என்று எச்.ராஜா கூறிய கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த வாரம் வரை திமுக - அதிமுக என்ற நிலை இருந்தது. ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜகவுக்கு வந்ததும், தற்போது திமுக - பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. நிச்சயமாக எங்கள் தலைமையிலான கூட்டணி தான் நாங்கள் இருக்கின்ற பக்கம் தான் வெற்றி பெறும். 

பாஜக தலைமையிலான கூட்டணி தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் என்றார். ஏற்கனவே அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற உட்கட்சி குழப்பம் நிலவி வருகிறது. அப்படி இருக்க, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருக்கும் போது, வி.பி.துரைசாமியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.