This Article is From Sep 29, 2018

“தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருகிறது”- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக அரசியல் சூழல் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி அளித்துள்ளார். 

“தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருகிறது”- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கோவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
திமுக-வுக்கு பின்னால் பாஜக செயல்படுவதாக அதிமுக குற்றம்சாட்டியது. அதன் பின்னர் அதிமுக பாஜகதான் இயக்குவதாக திமுக குற்றம் சாட்டியது. மற்ற கட்சிகளிடம் இருந்து பாராட்டு மற்றும் விமர்சனங்களை பாஜக எதிர்கொண்டு வருகிறது.

இதனால் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருவதைப் பார்க்கலாம். சபரி மலைக்கு பெண் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. மாநில அரசுதான் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2009-ல் நடந்த இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளே காரணம் என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கடந்த 25-ம்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இந்த பின்னணியில்தான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்து வருகிறது என்று பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.