This Article is From Feb 19, 2020

'வாக்காளர்களை நேரடியாகச் சந்தியுங்கள்' - சோனியா காந்திக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்!!

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 70-ல் 60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.

'வாக்காளர்களை நேரடியாகச் சந்தியுங்கள்' - சோனியா காந்திக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்!!

பீகாரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் இன்திகாப் ஆலம் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

New Delhi:

டெல்லியில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், வாக்காளர்களைக் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இந்த பிரசாரத்தை ஒரு மாதத்திற்கு நடத்த வேண்டும் என்று கூறி, பீகாரைச் சேர்ந்த இன்திகாப் ஆலம் என்ற காங்கிரஸ் நிர்வாகி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 70-ல்  60 இடங்களில் டெபாசிட்டை இழந்தது. 

இந்த நிலையில் கட்சித் தலைமைக்கு யோசனை கூறி, காங்கிரஸ் கட்சியின் பீகார் மாநில நிர்வாகி இன்திகாப் ஆலம், சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். பஞ்சாயத்து முதல் மாநிலம் வரையில் அனைத்து மட்டங்களிலும் இந்த சந்திப்பு ஒரு மாதத்திற்கு நடைபெற வேண்டும். இந்த பிரசாரத்தைத் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைக்க வேண்டும். 

இந்த சந்திப்பின்போது காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று வாக்காளர்களிடம் கேட்டு, அவர்களது கருத்துக்களை நாம் தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் மீது ஏன் வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பதும் இந்த சந்திப்புகள் மூலம் நமக்குத் தெரிய வரும். 

இவ்வாறு இன்திகாப் ஆலம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இந்தாண்டு பீகாரில் அக்கட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. 

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பீகாரின் பக்கத்து மாநிலமான ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

.