பிகாரில் 70 அடி புத்தர் சிலையைத் திறந்து வைத்த நிதிஷ் குமார்..!

பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் நலந்தா மாவட்டத்தில் 70 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையைத் திறந்து வைத்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிகாரில் 70 அடி புத்தர் சிலையைத் திறந்து வைத்த நிதிஷ் குமார்..!

ராஜ்கிரில் உள்ள கோரா கதோரா ஏரிக்கு நடுவில் இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது


Patna: 

பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் நலந்தா மாவட்டத்தில் 70 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

நாட்டின் இரண்டாவது உயரமான புத்தர் சிலையை நிதிஷ் குமார் நேற்று திறந்து வைத்தார். அப்போது, மகாபோதி கோயிலின் தலைமை அர்ச்சகர் பான்டே சலிந்தா உடனிருந்தார்.

ராஜ்கிரில் உள்ள கோரா கதோரா ஏரிக்கு நடுவில் இந்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. 45,000 ஃபுட் பிங்க் மண் கற்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலைத் திறப்பு விழாவின் போது நிதிஷ் குமார், ‘கோரா கதோரா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம். இங்கு இருக்கும் ஏரியைச் சுற்றி 5 மலைகள் உள்ளன. அதனால், இந்த ஏரி இயற்கையாக உருவானது. இந்த ஏரியைப் பார்க்க வரும் மக்கள், புத்தரின் தரிசனத்தையும் பெறலாம்' என்று பேசினார்.

அவர் மேலும், ‘இந்த ஏரிக்குப் பக்கத்திலேயே ஒரு அழகான பூங்காவை உருவாக்க உள்ளோம். பூங்காவிலிருந்து, புத்தர் சிலையைப் பார்க்க மிக அழகாக இருக்கும். பல சுற்றுலா பயணிகளை இந்த இடம் ஈர்க்கும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது.

இந்த இடத்துக்கு அருகாமையில் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மின்சார வாகனங்கள் மட்டுமே இங்கு இயக்கப்பட முடியும். இந்த இடத்துக்கு வருபவர்கள் நடந்தோ, சைக்கிள் மூலமோ அல்லது, மின்சார வாகனம் மூலமோ மட்டுமே வர முடியும்' என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளில் (Election Results in Tamil) இருந்தும் லேட்டஸ்ட் செய்திகள் & (Live Updates in Tamil) குறித்து தெரிந்து கொள்ள எங்கள் Facebook, Twitter பக்கங்களைப் பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................